Tuesday, March 27, 2012

வடமராட்சி வடக்கில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 27, 2012
இலங்கை::வட பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை கண்டித்து, வடமராட்சி வடக்கு மற்றும் வலிகாமம் கடற்றொழிலாளர்கள் இன்று பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இந்த பேரணியில் 21 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் மீனவர்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment