Friday, March 23, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு உதவுவதாக அமைந்து விடும்-ஐ.நா.மனித உரிமை பேரவையில் மஹிந்த சமரசிங்க ஆவேச உரை!

Friday, March 23, 2012
ஜெனீவா::எமது தாய்நாட்டின் இறைமை, சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நேற்று உரையாற்றும் போது கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

புலிபயங்கரவாதத்தை நாம் ஒழித்தது போல் ஐக்கிய மான செயற்பாட்டின் மூலம் சமத்துவம், கெளரவம், நீதி சகல இலங்கையர்களை மதித்தல் தொடர்பான எமது முயற்சிகள் உத்தரவாதப்படுத்தப்படும். எமது பொறுப்புக்கள் பற்றி எவரும் எமக்கு நினைவூட்டத் தேவையில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்தப் பிரேரணை ஏற்கத்தக்கதல்ல.

அமைச்சர் தொடர்ந்து கூறியதாவது: இப்பிரேரணை அங்கீகரிக்கப்பட்டால் இலங்கையில் நடைமுறை செயற்பாட்டுக்கு அது பெறுமானம் சேர்க்கமாட்டாது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் சுதந்திரம் இறைமை தொடர்பாக சந்தேகத்தை உருவாக்குகிறது.

உள்ளக பொறிமுறைக்கு ஏற்ப பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நியாயமான காலத்தை வழங்கமாட்டாது.

அமுலாக்க நடைமுறை தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் நடவடிக்கைகளையும் அது அங்கீகரிக்கவில்லை. உள்ளூரின் பொறி முறையைக் கொண்டு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயமாக முன் கூட்டியே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்ளூர் நீதித்துறையில் தலையிடாமை தொடர்பான கோட் பாட்டையும் தவறாக அது எடைபோடுகிறது. இலங்கை நிலைப்பாடு தொடர்பாக சரியாக ஆராய்ந்து ஏற்கனவே ஆரம்பித்துள்ள நடைமுறைகளை மேற்கொள்ள எமது மக்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக நாம் பேரவைக்கு கடந்த காலத்தைப் போன்று தெரிவிப்போம்.

இலங்கையின் நிலவரத்தைப் பொறுத்தவரை உள்ளக பொறிமுறை அறிக்கையை சமர்ப்பிப்பதில் மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன.

இக்கட்டத்தில் இந்த உள்ளக பொறிமுறையின் சகல அம்சங்களும் தொடர்பாக முன்கூட்டியே தீர்ப்பு மேற்கொள்வது சரியானதா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் இணக்கப்பாட்டை மேற்கொள்ளவும், இந்த நடைமுறையைத் தொடரவும் எமக்கு காலமும், இடமும் வழங்கப்படக்கூடாதா?

நாம் வரலாற்றுப் பெருமைகளை கொண்ட நாட்டவர்கள். எமது மரபுரிமைகளும், பெறுமானமும் மற்ற நாடுகளைப் போன்றதாகும்.

சர்வதேச சமூகத்தில் உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் எமது பொறுப்புக்களை ஏற்கிறோம்.

நிலையான சமாதானம், இணக்கப்பாடு நாட்டில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்தல் போன்றவை தொடர்பாக நாம் அவதானமாக இருக்கிறோம்.

ஸ்திரமற்ற தன்மை, புலிகளின் வன்முறைகள் காரணமாக முப்பது வருடங்களுக்கு பின்னர் நாம் சமாதானத்தையும், ஸ்திரப்பாட்டையும் தற்போது பெற்றுள்ளோம்.

எமது தெளிவான முன்னேற்றத்துக்கு எமக்குக் காலம் தேவை. குறுகிய மூன்று ஆண்டுகளுக்கு நாம் இதனை அடைந்துள்ளோம்...

ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் மீது இலங்கை அரசின் சார்பில் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிடுகையில்,இறையாண்மை கொண்ட நாடு சுயமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த 30 ஆண்டுகளாக புலிகளின் வன்முறையும், ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட இலங்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அமைதியும், ஸ்திரதன்மையும் நிலை நாட்டப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் மேம்பட கால அவகாசம் தேவை. எங்களுக்கு எதிரான தீர்மானம், புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு
உதவுவதாக அமைந்து விடும்,'' என்றார்.

No comments:

Post a Comment