Wednesday, March 21, 2012

மனித உரிமைப் பேரவை அமர்வுத் தீர்மானம் குறித்து இலங்கை ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது!

Wednesday,March,21,2012
இலங்கை::மனித உரிமைப் பேரவை அமர்வுத் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆவணமொன்றை தயாரித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதனால் ஏற்படக் கூடிய சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஓர் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு மாற்றமடையும் என இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் இறைமையையும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையையும் பலவீனப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமையக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைமை உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் உறுப்பு நாடுகளுக்கு இடையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment