Thursday, March 22, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் கடமைகள் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் தற்போது நிறைவேற்றப்படுவதில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகள் சில தமது அரசியல் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடொன்றின் நன்மையை கருத்திற் கொண்டே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானத்திற்கு எதிராக 15 நாடுகள் ஆதரவளித்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். எட்டு நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
பலம்பொருந்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாடுகளை இலக்கு வைத்து தீர்மானம் நிறைவேற்றும் நடவடிக்கை ஆரோக்கியமான நிலைமை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலம்பொருந்திய நாடுகள், சில நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு மக்களின் நன்மைக்ககாக அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment