Sunday, March 25, 2012

புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும் - ஹெல உறுமய!

Sunday, March 25, 2012
இலங்கை::புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் படையினரை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஜாதிக ஹெல உறுமய கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மானம் தமிழ் புலம்பெயர் மக்களுக்கு புதிய உத்தேகத்தை அளித்துள்ளதாகவும், புலிகள் மீள ஒருங்கிணைய அவர்கள் ஆதரவளிக்கக் கூடும் எனவும் ஸ்ரீவர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 700 புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் நலனை முதன்மையாகக் கொண்டு அமுல்படுத்தப்பட வேண்டுமே தவிர, சர்வதேச சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படைவீரர்கள் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள் என்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

புலிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை வகுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment