Wednesday, March 21, 2012

தேரர்கள் கொலை; சந்தேகநபர் கைது!

Wednesday,March,21,2012
இலங்கை::கோட்டை ரஜமஹா விகாரையில் தேரர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மஹரகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

கோட்டை ரஜமஹா விகாரையின் இரண்டு தேரர்கள் நேற்றிரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment