Saturday, March 24, 2012சென்னை::இலங்கைத் தமிழர் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக பாஜக மூத்த தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கூறியுள்ளதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவவும், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிடவும் பாராளுமன்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இடையில் 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு விரைவில் இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் எம்.பி.க்கள் குழு செல்லும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருப்பதால் இலங்கை அரசாங்கம் இக்குழுவை அனுமதிக்குமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
No comments:
Post a Comment