Friday, March 23, 2012சென்னை:ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உரிய நீதி கிடைக்க, மத்திய அரசு தலையிட வேண்டும்.
இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி, இரண்டு கடிதம் எழுதினேன். இதற்கிடையே இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இலங்கை வெளியுறவு அமைச்சர், நமது வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்த நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு, நேற்றைய தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, உலகத் தமிழர்களின் (புலிகளின்) சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment