Wednesday, March 21, 2012

இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் குறித்த இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ்!

Wednesday,March,21,2012
இலங்கை::இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் குறித்த இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க, இந்தியா விரும்புவதாக, நேற்று முன்தினம், பார்லிமென்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். அவரது இக்கருத்தை, இந்தியக் கட்சிகளும், இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றுள்ளன.

அதேநேரம், இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அந்நாடு இந்தியாவின் முடிவை மிகக் கவனமாக அணுகுவதைக் காட்டின.இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டு, நேற்று பேசினார். அப்போது, அமெரிக்க தீர்மானம் மீதான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படிக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment