Tuesday, March 20, 2012

பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை அல்லது நாளை மறுதினம்!

Tuesday, March 20, 2012
ஜெனீவா::இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது வியாழக்கிழமை இடம்பெறும் என ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி தமாரா குணநாயகம் நியூஸ் பெஸ்டுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த பிரேரணை தொடர்பில் அமெரிக்கா தமது பிரதான நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஜெனீவாவுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி ஏலின் டொனாஹே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை எடுப்பதனை ஊக்குவிப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடாக இந்த வாக்கெடுப்பினை கருதுவதாக ஏலின் டொனாஹோ குறிப்பிட்டுள்ளார்.

இல்லாவிடின் இலங்கை அரசாங்கம் நம்பகத் தன்மையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் என தாம் அஞ்சுவதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரேரணை வெற்றியடைவதாக இருப்பினும் அது கொள்கை ரீதியில் இலங்கை அரசாங்கத்தினை எந்த சட்ட கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தாது என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment