Monday, March 26, 2012

வெளிநாட்டு சக்திகளின் ஒத்துழைப்பு இன்றி பயங்கரவாதம் தலைதூக்க வாய்ப்பில்லை – அரசாங்கம்!

Monday, March 26, 2012
இலங்கை::வெளநிhட்டு சக்திகளின் ஒத்துழைப்பு இன்றி பயங்கரவாதம் மீளவும் தலைதூக்க வாய்ப்பு கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பாரியளவில் உதவிகளை வழங்கி வருவதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வலய மக்களும், முன்னாள் போராளிகளும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் திருப்தியுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே வட பகுதி மக்கள் ஆயுதம் ஏந்துவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துரதிஸ்டவசமாக யுத்தத்தின் பின்னர் சில ஊடக நிறுவனங்கள் நாட்டுக்கு பாதகம் ஏற்படு;ம் வகையிலான பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஆயுத வன்முறைகள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தன.

அந்தக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment