Friday, March 2, 2012

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் தொடர்பாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வேன்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 02, 2012
ஜெனீவா::இலங்கையில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் தொடர்பாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் தான் முறைப்பாடு செய்யப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

மேற்படி இரு ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக சில தனி நபர்களால் தாக்கப்பட்டதாகவும் அதை அவர்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய நபர் ஒருவர் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினார். அவர் தனது வகுப்பு வந்த பாடசாலை மாணவி ஒருவருடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினால் அம்மாணவியின் சகோதரர் மேற்படி நிருபரை தாக்கினார். அந்நிருபர் இச்சம்பவத்தை ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையாக காண்பித்தார்' என அமைச்சர் கூறினார்.

மற்றொரு ஊடகவியலாளரை யாழ் மாநகர சபையிலுள்ள உள்ளூராட்சி அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட பகைமை காரணமாக தாக்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் இருவரும் இலங்கையில் தமக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சுவிட்ஸர்லாந்தில் தஞ்சம் பெற்றுள்ளனர். இது குறித்து நான் முறைப்பாடு செய்வேன்' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment