

Wednesday,March,21,2012மெக்சிகோ சிட்டி, -மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 800 வீடுகள் சேதமடைந்தன. மக்கள் கடும் பீதியடைந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாரிரோ மாநிலம் ஓமிடேபெக் நகரை மையமாக கொண்டு இது ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் குவாரிரோ, ஒவாசாகா மாநில பகுதிகள் குலுங்கின. அங்கு 800-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டிடங்கள் ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டது. விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. நடைபாலம் ஒன்று இடிந்து காலியாக சென்ற பஸ் மீது விழுந்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா விடுமுறையை கழிக்க மெக்சிகோ சென்றிருந்தார். அவர் பத்திரமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மெக்சிகோ சிட்டியில் கடந்த 1985-ம் ஆண்டு 8.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment