Friday, March 2, 2012

58 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது!

Friday, March 02, 2012
இலங்கை::58 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கும் 35 பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கும் 12சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் எட்டு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குற்ற அறிக்கையிடல் பிரிவு, விசேட பாதுகாப்பு பிரிவு, அரச புலனாய்வு மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு , ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு , வலான மத்திய உழல் ஒழிப்புப் பிரிவு மற்றும் தலைமையகம் ஆகியவற்றுக்காக புதிய பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களாகிய அநுர சேனநாயக்க , அசோக்க விஜயதிலக்க மற்றும் எஸ்.கே. சங்கர் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவைகளுக்கான தேவையை கருத்திற்கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஆறிவித்துள்ளது.

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்!



சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இதுவரை கடமையாற்றிய அசோக்க விஜேதிலக்க சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சப்ரகமுவ மகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.கே.சங்கர், ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment