


Thursday, March 22, 2012இலங்கை::பொலிஸ் வரலாற்றில் துரதிஷ்டமான பதிவு – கிழக்கில் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நாள்:-
பொலிஸ் வரலாற்றில் துரதிஷ்டமான பதிவு 1990ம் வருடம் ஜூன் மாதம்11ம் திகதியாகும் அன்றைய தினம் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிழக்கிலே LTTE பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1965ம் வருட 16ஆம் இலக்க கட்டளைச் சட்டக்கோவையின் பிரகாரம்1866 செப்டம்பர் 03ம் திகதி பொலிஸ் படை ஆரம்பிக்கப்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம் என மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.யு.ஆர்.பி செனவிரத்ன தெரிவித்தார்.
உயிர்நீத்த பொலிஸாரை நினைவுகூரும் 148வது பொலிஸ் ஞாபகார்த்ததின மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் 1864 மார்ச் மாதம் 21ம் திகதி சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் புலி தீவிரவாதியினால் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 148 வருடமாகும்.
இந்த உயிரத்தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்காக கேகாலை பிரதேசத்துக்குப் பொறுப்பான ஈ.ஆர்.சோண்டஸ் என்ற மாவட்டசெயலாளரினால் சபானை ஞாபகப்படுத்துவதற்காக மாவனல்லையில் நினைவுச் சின்னத்தை நிறுவினார்.
அன்று சபானின் வீர மரணத்திலிருந்து இன்று வரை சுமார் 3075 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையின் போது உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர்.
அதிலே அதிகளவுஉயிர்கள் கடந்த 30 வருடகாலமாக இந்த நாட்டில் நிலவிய கொடுர யுத்தத்தினால் உயிரிழந்தவர்களேயாகும்.
பொலிஸ் வரலாற்றில் துரதிஷ்டமான பதிவு 1990ம் வருடம் ஜூன் மாதம்11ம் திகதியாகும் அன்றைய தினம் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிழக்கிலே எல்.டி.டி.யி டு.வு.வு.நு.பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இராணுவ வீரர்களுக்கான மேலதிக உதவிகளினாலேயே பொலிஸாரும் உயிர்களை தியாகம் செய்ய நேரிட்டது.
3தசாப்தகால யுத்தத்திற்கு மாறாக இந்தநாட்டில் 1971, 1989ம் ஆண்டுகளில் ஏற்பட்ட குழப்ப நிலையினாலும் எமது பொலிசாரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
பொலிஸார் குற்றங்களை தடுக்கும் அதே சமயம் மக்கள் சமாதானமாக வாழவும் ஏற்ற சூழலை அமைக்கவுமே பாடுபடுகின்றனர். அண்மைக்காலங்களில் புத்தளம், வரகாபொலை’மொரட்டுவை ஆகிய பகுதிகளில் தமது உயிரை ஈடாக்கி மக்களின் உயர்களையும் ‘சொத்துக்களையும் பாதுகாத்த அவர்களை இன்று மிகவும் கண்ணியமாக நினைவுகூறுகின்றோம்.
பொலிசார் தமது கடமையை செயற்படுத்தும் போது பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக தாக்குதல் நடத்துவது மட்டுமல்ல’சட்டத்தை வீழ்த்துவதற்காக செயலாற்றுவதேயாகும்.
நாம் பிறந்த இந்த தாய் நாட்டுக்காக, எமக்கு கிடைக்கும்பற்றியோடு, இதயசுத்தியுடனும், தேசப்பற்றுடனும், செயல்பட வேண்டும். தமது உயிரை தியாகம் செய்யவும் தயாரான வீரர்களை உருவாக்கிய பெற்றோர்களே. நீங்கள் உயிரை தியாகம் செய்த வீரங்களுடன் ஒன்றினையும் அதே சமயம், தாய் நாட்டுக்காக உண்மையான கடமையை செய்தவர்களில் பெறுமதியான மனித வீரர்கள். அதே போல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனைவி, சகோதர, சகோதரிகள், பிள்ளைகளாவதையிட்டு நீங்கள் பெருமையடைய வேண்டும் காரணம் அவர்கள் எமது தாய்நாட்டுக்கான உயிர் தியாகிகள் என்பதனையாகும்.
இவ்வாறு உயிர் தியாகிகளுக்கான எல்லாவித சேவைகளையும்’இலங்கை பொலிஸ் சேவையின் எல்லா விதமாகவும் செயற்படுத்துவதற்க்கு அவர்களினது உறவினர்களான உங்களுக்கு எமது திணைக்களம் வழங்க கடமைப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.யு.ஆர்.பி செனவிரத்ன தெரிவித்தார்.
No comments:
Post a Comment