Tuesday, March 27, 2012

இந்தியா உள்பட 12 நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை?.

Tuesday, March 27, 2012
வாஷிங்டன்::ஈரான் பயங்கர அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி, அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை இந்தியா நிராகரித்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 23 நாடுகளில், இறக்குமதியை குறைத்து கொள்ளாத இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருவதாகவும், வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலேண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்று ஈரானில் இருந்து இறக்குமதியை கணிசமாக குறைத்து கொண்ட ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீது தடை இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

No comments:

Post a Comment