Wednesday, February 8, 2012

புலிகளை ஒழித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது:ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்-இந்திய ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!

Wednesday,February,08,2012
இலங்கை::இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியப்படவும் மாட்டாது. இன்றைய நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது”

இந்திய ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த அவர் நேற்று கதிர்காமத்திற்கு சென்று வழிபாடு நடத்தியதன் பின்னர் இரத்தினபுரி வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புலிகளை ஒழித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன் றத்தின் முன் நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக் காது புலிகளை இல்லாதொழித் தார். இதனால் இலங்கை வாழ் இந்திய மக்களும் இதர மக்களும் நாட்டில் (இலங்கையில்) எவ்வித இராணுவ கெடுபிடிகள் இல்லாமலும் சகல பகுதி களுக்கும் சென்று வரமுடியும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்ய பின்வாங்கியதால் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணமாகும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அல்லது உதவி வழங்குவது தனியாக தமிழ்நாட்டு அரசாங்கத்தால் முடியாது. கச்சதீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தமொன்றின் கீழேயே வழங்கப்பட்டது. தற்போது கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதியை நிறுத்த முடியாது. ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றே கூறலாம். புலிகள் ராஜிவ் காந்தியை கொண்டதுதான் அவர்கள் செய்த மாபெ ரும் தவறு. அது அவர்களின் முட்டாள் தனமான செயல். கூலிக்காக செய்தார்களா? அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது. “ராஜிவ் காந்தி” இலங்கை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டவர்.

ஒரு இலட்சம் இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருந்தனர். ராஜிவ் உயி ருடன் இருந்தால் பிரச்சினை சுமூகமாக இருந்திருக்கும். புலிகள் போதை பொருட் கள், உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலு மீடுபட்டனர். இதனை எவரும் மறுக்க முடியாது. தென்பகுதி சிங்கள மக்களின் தன் மானத்திற்கு இடையூறு விளைவிக்காத நிலையில் தமிழ் மக்களுக்கும் சுய உரிமை வழங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தினை நம்பி பேச்சுவார்த்தையிலீடுபட வேண்டும். நம்பிக்கையில்லாத விடயம் தோல்வியில் முடியும். தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சந்தேகத்துடன் அனைத்தையும் நோக்குகின் றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை நம்ப மறுக்கின்றனர்.

இதனால் தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக் கின்றனர். இந்தியாவோ அல்லது வெளிநாடு களின் அழுத்தங்களூடாக இலங்கைக்கு தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தால் அந்நாட்டுக்கு (இலங்கைக்கு) உதவி செய்ய இன்னும் பல நாடுகள் உள்ளன. விடுதலை புலிகளின் முடிவு பாராட்டுக்குரியது. அவர்கள் சில வெளி நாட்டு தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டனர். பயங்கரவாதம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொள்ள முடியாது.

பயங்கரவாதத்தினால் உலகில் எந்த பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை பயங்கர வாதத்தால் வட கிழக்கிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வடகிழக்கு மக்களை விட இலங்கை வாழ் இந்திய மக்கள் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

ஸ்ரீமா - லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய (மலையக) மக்களில் பலர் இந்தியா சென்ற போதிலும், இலங்கையில் இன்றும் பலர் இருக்கின்றனர்.

இவர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் இந்தியா கூடுதல் அக்கறையும் கரிசனையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறு இருக்க முடியாது. இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை முன் கொண்டு வரும் பொருட்டு டில்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment