Tuesday, February 07, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த அமெரிக்கா பூரண ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சுபீட்சத்தையும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மூலம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவினை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment