Friday, February 3, 2012

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-HRW.!

Friday, February 03, 2012
இலங்கை::மனித உரிமை மீறல்கள் தொடர்பில்ழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனமனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்திள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை இலங்கையில்தொடர்ந்தும் நீடிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைவிவகாரம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடக்க உள்ள நிலையிலும், மனிதஉரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் இலங்கை அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இது தொடர்பில் மனித உரிமைப் பேரவை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் காணாமல் போனோர்பற்றிய சரியான விசாரணைகளை மனித உரிமைப் பேரவை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மனித உரிமைப் பேரவை பாரியமனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்ததாக கருத நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளைஅமுல்படுத்துவதற்கு மனித உரிமைப் பேரவை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நிபுணர் குழுபரிந்துரை செய்துள்ளதாகவும், இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானதுஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்என்பதில் நம்பிக்கையில்லை என மனித உரிமை கண்காணிப்பககத்தின் ஜெனீவாவிற்கான துணைப்பணிப்பாளர் பிலிப் டேம் தெரிவித்துள்ளார்.

எனவே சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும்அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment