Friday, February 10, 2012

திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், தமிழரசி வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு!

Friday, February 10, 2012
திருப்புத்தூர்::திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், தமிழரசி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெரியகருப்பனின் பண்ணை வீடு, அடகுக்கடை உள்பட 10 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன். கடந்த திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றினார். பெரியகருப்பனின் சொந்த ஊரான அரளிக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை 6.45 மணிக்கு விருதுநகர் டிஎஸ்பி சியாமளாதேவி தலைமையில் போலீசார் வந்தனர். பெரியகருப்பன் சென்னையில் இருப்பதாக வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என போலீசார் கூறினர். பின்னர், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், வீடு முழுவதும் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டில் உள்ள நகைகள், ஆடம்பர பொருட்கள், வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அரளிக்கோட்டையில் உள்ள பெரியகருப்பனின் பண்ணை வீடு, பைகுடிபட்டியில் உள்ள அவரது மாமனார் மாணிக்கத்தின் வீடு, வேலங்குடியில் உள்ள கிரஷர், திருப்புத்தூரில் உள்ள பெரியகருப்பனு க்கு சொந்தமான கட்டிடம் மற்றும் சென்னையில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மாதா கோயில் தெருவில் உள்ள பிரபஞ்சா அபார்ட்மென்ட்டின் 4&வது மாடியில் பெரியகருப்பனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு டிஎஸ்பி சுதாகர், இன்ஸ்பெ க்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் பெரியகருப்பன், அவரது மனைவி இருந்தனர். சென்னை மண்ணடி சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள பெரியகருப் பனின் உறவினர் வீட்டிலும் சோதனை நடந்தது.

காரைக்குடி அருகே பள்ளத்தூர் கீழ மேல்வீதியில் உள்ள திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் பெரியகருப்பனின் ஆதரவாளருமான கே.எஸ்.ரவி வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையில் சோதனை நடந்து வருகிறது. காரைக்குடி கோர்ட் முன்புறம் உள்ள மற்றொரு ஆதரவாளரான கான்ட்ராக்டர் நாதன் வீட்டில் தூத்துக்குடி டிஎஸ்பி கண்ணன் தலை மையில் 7 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசுக்கார செட்டியார் தெருவில் பெரியகருப்பனுக்கு சொந்தமான கோகுல் பேங்கர்ஸ் என்ற நகை அடகுக்கடை உள்ளது. அங்கு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், எஸ்ஐக்கள் பாலசுப்பிரமணியன், சுகுமாறன் உள்பட 9 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். கடையில் இருந்த ஆவணங்கள், நகைகளை ஆய்வு செய்தனர். பெரியகருப்பன் வீடுகளில் ரெய்டு நடப்பதாக தகவல் பரவியதும் திருப்புத்தூரில் உள்ள அவரது வீட்டு முன்பு திமுக ஒன்றிய செயலாளர் செழியன், முன்னாள் நகர செயலாளர் சாக்ளா, மகிபாலன் பட்டி ஊராட்சி தலைவர் சோமசுந்தரம், நகர் பொருளாளர் பிச்சைமுகமது மற்றும் திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், ‘அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் ரூ.1.10 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக பெரியகருப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. தமிழரசி வீட்டிலும் ரெய்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. மதுரை அய்யர் பங்களா எழில் நகரில் உள்ள இவரது வீட்டுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தங்கசாமி தலைமையில் போலீசார் வந்தனர். வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி, அதற்கான உத்தரவை காட்டினர். தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வ £ங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். வீட்டில் இருந்த நகைகள், நிலம் தொடர்பான பத்திரங்களை ஆய்வு செய்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையையும் திறக்க சொல்லி பார்வையிட்டனர். சோதனை முழுமை யாக முடிந்தபிறகே வீட்டில் கிடைத்த ஆவணங்கள் குறித்த விவரங்களை சொல்ல முடியும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment