Tuesday, February 28, 2012

இலங்கைக்கெதிரான யோசனையை அமெரிக்காஇன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்க தீர்மானம்!

Tuesday, February 28, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று (28) ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக நேற்று (27) தெரியவந்ததாக திவயின தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த யோசனை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு,முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

அதேவேளை அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை சமர்பிக்க இடமளிக்க வேண்டாம் என இலங்கை அமைச்சர்கள் குழு, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையானது உலகில் ஏனைய நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு நேர்ந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை செயற்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என இலங்கை குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த இலங்கை விரோத யோசனையை சமர்பிக்க இடமளிhத்தால், இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட சந்தர்ப்பம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment