Wednesday, February 15, 2012

சர்வதேச அழுத்தங்களின் போது பொதுநலவாய நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது காலத்தின் தேவை -இலங்கை பிரதமர் டி.மு.ஜயரத்ன!

Wednesday, February 15, 2012
இலங்கை::சர்வதேச அழுத்தங்களின் போது பொதுநலவாய நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது காலத்திற்கு உகந்தது என பிரதமர் டி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒரு நிலைப்பாட்டில் இருந்தால் பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வுகாண இலகுவாக இருக்கும் என பிரதமர் குறிப்பிடடுள்ளார்.

இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சம்மேளன நிறைவேற்றுக் குழுத் தலைவர் ஸ்ரீன் எலன் கோடினை சந்தித்தபோது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற சம்மேளனத்தின் 58வது கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகளை செய்யவென ஸ்ரீன் எலன் கோடின் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment