Thursday, February 16, 2012நியூயார்க்:சில வெளிநாட்டு ஊடகங்கள் தமக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களைஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிதி மேஜர் ஜெனரல்சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சிலர் இவ்வாறு தமக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார்.
சில மனித உரிமை அமைப்புக்களும் இந்த முனைப்புக்களுக்கு ஆதரவளித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சில ஊடகங்கள் தற்போது தம்மை இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவின் விசேட பிரதிநிதியாக நியமித்தபோது அமைதி காத்து வந்த சில ஊடகங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இலக்குவைத்து தற்போது சர்ச்சையை கிளப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment