Thursday, February 2, 2012

வட மாகாணத்தில் நிரந்த படை முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்: மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Thursday, February 02, 2012
இலங்கை::வட மாகாணத்தில் நிரந்த படை முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் மாத்திரமன்றி இந்த படை முகாம்கள் கிழக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"இந்த படை முகாம்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவே அமைப்படுகின்றனவே தவிர வேறு எந்த நோக்கமுமல்ல. குறித்த முகாம்களை அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும்.

இதற்கு சட்டத்தில் இடமுண்டு. எனினும் குறித்த சட்டத்திலுள்ள விடயம் புதிதாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு முதலே இது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை அரசாங்கம் சுவீகரித்த பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டும். ஆனால் இதுவரை எந்த பிரதேசங்களில் இராணுவ முகாம் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டவில்லை.

இராணுவ முகாம் அமைக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தினால் மாற்ற அல்லது இராணுவ முகாமின் பரப்பை குறைக்கவும் முடியும். இதற்காக காணிகள் சுவீகரிக்கப்படும் மக்கள் வேறு இடங்களில் மறு குடியேற்றம் மேற்கொள்ளப்படும்.

இவர்களுக்கு சுமார் 40 பேர்ச் காணி வழங்கப்படும். குறித்த காணியின் 20 பேர்ச் நிலத்தில் வீடு கட்டுவததுடன் ஏனைய 20 பேர்சில் விவசாயம் மேற்கொள்ளப்படும்.இதற்கு மேலதிமாக குறித்த மக்களுக்கு வீடு நிர்மாணித்து கொடுப்பதுடன் சுயதொழில் மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் உதவும்" என்றார்

No comments:

Post a Comment