Thursday, February 9, 2012

குர்கான் சி.ஆர்.பி.எப். மைதானத்தில்: மெஷின் துப்பாக்கியால் புல்ஸ் ஐ’ என்று அழைக்கப்படும் இலக்கை குறி பார்த்து விறுவிறுவென சுட்டார் ப.சிதம்பரம்!

Thursday, February 09, 2012
குர்கான்::மத்திய உள்துறை அமைச் சர் ப. சிதம்பரம் கைதேர்ந் தவரை போல் இலகு ரக தானியங்கி துப்பாக்கி யால் சுட்டார். அரியானா மாநிலம் குர்கானில் உள்ள கர்தார் பூரில் மத்திய ஆயுதப் படை போலீசுக்காக (சிஆர்பிஎப்) உளவுப்பிரிவு பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர். மேடையில் இருந்து இறங்கிய அவரை அருகில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத் துக்கு சிஆர்பிஎப் டிஜிபி விஜயகுமார் அழைத்துச் சென்றார். அவர்களை நிரு பர்களும், டிவி கேமராமேன் களும் தொடர்ந்தனர். மைதானத்தில் இலகு ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று, குண்டுகள் நிரப்பப் பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அருகே சென்றதும் சிதம்ப ரம் அதை எடுத்தார். அவருக்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்காமல் இருப் பதற்காக, காதை மூடும் கவசத்தை விஜய குமார் கொடுத்தார். அதை வேண் டாம் என்று ஒதுக்கிய சிதம் பரம், அங்கு நடக்க இருந்த துப்பாக்கிச் சுடும் பயிற் சியை தொடங்கி வைக்கும் விதமாக 50 மீட்டர் தொலைவில் வைக்கப் பட்டு இருந்த ‘புல்ஸ் ஐ’ என்று அழைக்கப்படும் இலக்கை குறி பார்த்து விறுவிறுவென சுட்டார்.

தோட்டாக்கள் வெளி யேறிய போது, துப்பாக்கி யில் இருந்து வெளியான சத்தம் காதை துளைத்தது. சிதம்பரம் சுட்டதை பார்த்து எல்லாரும் கைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர், துப்பாக்கியை வைத்து விட்டு அங்குள்ள மேடைக்கு சிதம்பரம் சென்றார். அவரை பின் தொடர்ந்த நிருபர்கள், இலக்கை சரி யாக சுட்டீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவரோ, விஜயகுமாரோ பதில் அளிக்க வில்லை. இலக்கை சிதம்பரம் சுட் டாரா? இல்லையா? என் பது கடைசி வரை புதிரா கவே போனது.

No comments:

Post a Comment