Tuesday, February 07, 2012இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் யுத்தக்குற்ற விவகாரக் கையாளுகைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் ஜே. ரெப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன் ஆகியோர் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது சமகால அரசியல் விவகாரம், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் காலம் கடத்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அவசர அவசிய பிரச்சினைகள், மீள்குடியேற்றம், வாழ்வாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.
அத்துடன் இறுதிக்கட்ட யுத்த நிலைமை குறித்தும் இங்கு பேசப்பட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment