Saturday, February 11, 2012சென்னை::சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்எல்ஏ, நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தேர்தல் பணிக்காக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் நான் தேர்தல் பிரசாரம் செய்வேன். கடந்த தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். எனவே கூட்டணியில் விஜயகாந்த் இல்லாவிட்டாலும் அதிமுக பெரும் வெற்றி பெற்று இருக்கும்.
மீண்டும் தேர்தல் நடத்த எவ்வளவு செலவாகும் என்ற அடிப்படை பொருளாதாரம் புரியாமல் விஜயகாந்த் பேசுகிறார். கவர்னர் ஆட்சியில் தேர்தல் நடத்த தயாரா என்று அவர் கூறுவது வேடிக்கையானது. வேண்டுமானால் விஜயகாந்த் ராஜினாமா செய்யட்டும். கர்நாடக சட்டப் பேரவையில் அமைச்சர்கள் ஆபாச படம் பார்த்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. தேவைப்படும் போது வெளியே சென்று பேசட்டும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
No comments:
Post a Comment