Sunday, February 26, 2012

யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது-ரணில் விக்கிரமசிங்க!

Sunday, February 26, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக எந்தவிதமான யுத்த குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலநறுவைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

நான் பிரதமராக கடமையாற்றிய காலப்பகுதியினில் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும் யுத்த குற்ற நீதிமன்றத்தின் முன் இலங்கையர் எவரையும் முன்னிறுத்த முடியாது

No comments:

Post a Comment