Friday, February 03, 2012இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழிலில் ஈடுபட்ட ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இவர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பட்டிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் விவசாய அறுவடையின் போது அறுவடை இயந்திரத்தின் சாரதிகளாக பணியாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நவீன முறையில் அறுவடை இயந்திரத்தை இயக்குவதற்கு தேவையான ஆளணியை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமம் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த நீதிமன்றப் பதிவாளர் கைது!
கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றப் பதிவாளரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பதிவாளரான ஏ.சி.குணசேகர நேற்று வியாக்கிழமை 3.30 மணியளவில் நீதிமன்றத்திலுள்ள தனது அலுவலகத்தில் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொண்ட பின்னர் அவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.
அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இவர் மதுபோதையில் காணப்பட்டதால் இவர் பல சந்தர்ப்பங்களில் சிரேஷ்ட அதிகாரிகளினால் கண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment