Wednesday,February,08,2012இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிமுத்துவின் பரம்பரை வீட்டில், பலவந்தமாக குடியிருந்து வருவதாக அரசாங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதென திவயின தெரிவித்துள்ளது.
பிள்ளையான் தமது தந்தைக்கு சொந்;தமான வீட்டில் தங்கிருப்பதாகவும் அவர் அதற்கு வாடகையும் கொடுப்பதில்லை எனவும் தம்பிதுமுத்துவின் புதல்வர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். அந்த வீட்டை தருமாறு கேட்டபோதும், அவர்களை அதனை வழங்கவில்லை எனவும் அருண் கூறியுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் பிள்ளையான் தம்பிமுத்துவின் வீட்டில் வசித்து வருவதை, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதனும் உறுதிப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment