Friday, February 03, 2012சென்னை::தீவிரவாத சிந்தனையுள்ள சிலரின் தவறான போக்கிற்கு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலியாகக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானதேசிகன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள், மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய குழுவினர் மாநில அரசு பிரதிநிதிகளோடு பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக அணு உலை எதிர்ப்பாளர்களை வழிநடத்தி செல்பவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தைவிட தீவிரவாத போக்கை கடைபிடித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்றனர். போகிற போக்கில் குறிப்பாக காங்கிரசை மையப்படுத்தி பேசி வருவதை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இந்து முன்னணியினருக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த மோதலுக்கும் காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் துணை போகவில்லை. வன்முறையையும் ஆதரிக்கவில்லை. கைதானவர்கள் அனைவரும் இந்து முன்னணியினர். வன்முறையை கண்டித்த அரசியல் கட்சிகள் காங்கிரசை சம்பந்தப்படுத்தவில்லை. ஆனால், தேவையில்லாமல் அந்த அமைப்பின் தலைவர்கள் காங்கிரசை கொச்சைப்படுத்தி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தீவிரவாத சிந்தனையுள்ள சிலரின் தவறான போக்கிற்கு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலியாகக்கூடாது. இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment