Sunday, February 12, 2012இலங்கை::புத்தளம் மற்றும் மாரவில ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய 4 பொலிஸ்
உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுக்கத்தை மீறியமையை கருத்திற் கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ததாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தின் இரு கான்ஸ்டிபிள்கள் கடமைக்காக வெளியில் சென்ற போது, அவர்களிடம் மேலதிகமான பணம் காணப்பட்டமையே பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தமது பொறுப்பிற்கு அப்பாற்பட்ட கடமைகளில் ஈடுபட்டமையினால் மாரவில
பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டிபிள் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோர் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளை அடுத்து இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment