Thursday, February 16, 2012

சவேந்திர சில்வா தொடர்பில் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கையை பான்-கீ-மூன் நிராகரித்துள்ளார் - திவயின!

Thursday, February 16, 2012
இலங்கை::மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமாறு மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையும், பாதுகாப்புச் சபையின் சட்ட கட்டமைப்பின் கீழ் ஐ.நா அமைதிப்படை இயங்குவதால், தன்னால், எதனையும் செய்ய முடியாது என பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐரோப்பாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும், சர்வதேச அரசசார்பற்ற அமைப்பின் குழுவினரும், ஜெனிவாவில் நவநீதம் பிள்ளையை சந்தித்து, ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சவேந்திர சில்வாவை நீக்குமாறு, பான்-கீ-மூனிடம் கோரிக்கை விடுக்குமாறு கோரியிருந்தனர் என திவயின தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐ.நா அமைதிப்படையின் ஆலோசனை சபைக்கு சவேந்திர சில்வாவை நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்த, ஆசிய நாடுகள் பலவற்றிற்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள புலிகளின் வலையமைப்பினர், சவேந்திர சில்வாவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு கோரி, 200 மகஜர்களை அனுப்பியுள்ளனர்.

சவேந்திர சில்வாவை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருவதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment