Thursday, February 2, 2012

புத்துயிர் பெறவுள்ள வடபகுதி ரயில் சேவை!

Thursday, February 02, 2012
இலங்கை::வடபகுதி ரயில் மார்க்க மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் மாங்குளம் வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் அழிவடைந்த வடபகுதி ரயில் பாதைகளை மறுசீரமைக்கும் பணிகள் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்பிரகாரம் கட்டங்கட்டமாக வடபகுதிக்கான ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையான ரயில் பாதைகள் ஏற்கனவே மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் மார்க்கத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2014ஆம் ஆண்டிற்குள் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment