Saturday, February 25, 2012

அரசாங்கப் பிரதிநிதிகள் நவனீதம்பிள்ளையுடன் பேச்சுவார்த்தை?.

Saturday, February 25, 2012
இலங்கை::Saturday, February 25, 2012
இலங்கை::ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள், ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவில் குறிப்பிடப்பட்ட குற்றச் செயல்களுக்குதண்டனை விதிக்கும் விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய கவனம்செலுத்தத் தவளியுள்ளதாக நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றத்திட்டமிட்டுள்ள தீர்மானம் தொடர்பில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது எனநவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர்,நவனீதம்பிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நவனீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டதாக பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாதெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களே நல்லிணக்கம் பற்றி தீர்மானிக்க வேண்டும் எனவும்,வெளிச் சக்திகளினால் நல்லிணக்கம் பற்றி தீர்மானிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை நாட்டு மக்கள் அங்கீகாரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல் கய்தா தலைவர் ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்ட போது எவரும்மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாருஸ்மன் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்துநவனீதம்பிள்ளையிடம் தாம் சவால் விட்டதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்தெரிவித்துள்ளார்.

அறிக்கை தயாரிக்கப்பட்ட போது சரியான முறையில் சாட்சியங்களிடம்ஆதாரம் திரட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுநியமிக்கப்படவில்லை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment