Wednesday, February 15, 2012இலங்கை::எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து சிலாபம் நகரில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் முதல் சிலாபம் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தொடர் பதற்றநிலை காணப்பட்டு வந்த நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, இச்சம்பவம் இடமடபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்பு அதிகரிகிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment