Saturday, February 25, 2012
போபால்::மத்திய பிரதேச மாநிலத்தில் மிராஜ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த இரண்டு பைலட்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து, வழக்கமான பயிற்சிக்காக நேற்று புறப்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானம், பிந்த் மாவட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. விமான இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை தெரிந்து கொண்ட பைலட்கள், பாரசூட் மூலம் குதித்து தப்பினர். இது குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், "இந்த விபத்து குறித்து கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து குதித்த பைலட்களை தேடி வருகிறோம். இந்த ஆண்டில் போர் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறை. கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் கிரன் எம்.கே.2 ரக பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது' என்றார்.

No comments:
Post a Comment