Tuesday, February 7, 2012

விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!

Tuesday, February 07, 2012
சென்னை::தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

இப்ராகிம்ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார்.

பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இப்ராகிம் ராவுத்தரும், நடிகர் வடிவேலுவும் சந்தித்து, இருவரும் அதிமுகவில் இணையவது பற்றி ஆலோசித்ததாக செய்தி பரவின. இந்நிலையில் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment