Saturday, February 11, 2012இலங்கை::நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படுவர் எனஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின்ஊடாக ஜனாதிபதி, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சகல மாவட்டங்களிலும் இராணுத்தினரை நிலைநிறுத்துவது தொடர்பான அறிவிப்பு,பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியினால் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12ம் சரத்தின் அடிப்படையில்இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைகட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு இராணுவத்தினர் சகல மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்படஉள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தஅறிவிப்பு விடுக்கப்படுவதாகவும், இது வழமையான அறிவிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment