Thursday, February 9, 2012

நகையை தர மறுத்ததால் கழுத்து நெரித்து கொன்றேன் : குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

Thursday, February 09, 2012
சென்னை::சென்னை அபிராமபுரம், நுங்கம்பாக்கத்தில் பெண்களை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து பிடிபட்டவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வங்கி பெண் ஊழியர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்து 22 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோல் அபிராமபுரத்தில் 80 வயது மூதாட்டி நகைகளுக்காக கொல்லப்பட்டார். இந்நிலையில், சென்னையில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத¢தி வந்தனர். அவர்களில் பலர் மீது சந்தேகத்தின் பேரில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, போட்டோ எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில்தான் மயிலாப்பூர் போலீசார் கடந்த வாரம், 38 வயதுள்ள ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. அவரை போட்டோவும் எடுத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தன்னுடைய பெயர் ஆரோக்கியசாமி. சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. சென்னையில் வேலை தேடி வந்திருக்கிறேன். தங்க இடம் இல்லாததால், சுற்றித்திரிவதாக கூறினார். அதன்பின், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாநில கை ரேகை ஆய்வகத்திற்கு இவரது கை ரேகையை அனுப்பினர். அப்போதுதான், போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவரது கை ரேகையும், அபிராமபுரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் பெண்கள் கொலையான வீடுகளில் கிடைத்த கைரேகைகளும் ஒன்றாக இருந்தது.

இதையடுத்து, ஆரோக்கியசாமி தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன்பின், அவர் போலீசில் கொடுத்த முகவரியின் படி, சிவகங்கை மாவட் டம் காரைக்குடிக்கு தனிப்படை சென்றது. அங்கு, 2 பெண்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் ஆரோக்கியசாமி போட்டோவை காட்டி, போலீசார் விசாரித்தனர். இவன் எங்களுடைய தம்பிதான். சிறுவயதிலேயே பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். அதனால், அவனை வீட்டில் இருந்து விரட்டி விட்டோம். இவனது பெயர் ஆரோக்கியசாமி இல்லை. பிரான்சிஸ் என்றனர். அவர்கள் அளித்த தகவல¤ன் பேரில், கோடம்பாக்கத்தில் வீட்டில் இருந்த பிரான்சிசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசில் பிரான்சிஸ் அளித்துள்ள வாக்குமூலம்:

சென்னையில் பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி கொள்ளை அடித்துள்ளேன். சிறுவயதிலேயே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டேன். அப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டேன். கொள்ளையடிக்கும் இடத்தில் யாரையும் கொலை செய்ய வேண்டும் என நினைப்பதில்லை. ஆனால், பெண்கள் தப்பி வெளியே சென்று சத்தம் போட்டால் சிக்குவேன் என்பதற்காக அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிவேன். இதனால், அவர்கள் பயந்து போய் வீட்டிலேயே இருப்பார்கள். இதையடுத்து, அவர்களை மிரட்டி கொள்ளையடிப்பேன். ஆனால் அபிராமபுரத்திலும், நுங்கம்பாக்கத்திலும் பெண்கள் சத்தம்போட்டு, நகையை கொடுக்க மறுத்தனர். அதனால் அவர்கள் கழுத்தை நெரித்து கொன்றேன். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் பிரான்சிஸ் கூறியுள்ளார். இவரிடம் இருந்து 80சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

செயின் கொள்ளையன் மக்களிடம் சிக்கினான் : 41 பவுன் மீட்பு!

சென்னை: பெண்ணிடம் செயின் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்தனர். அவரிடமிருந்து 41 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குமரன் நகர் ரெட்டிக்குப்பம் பகுதியில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது பின்னால் வந்த நபர், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடினார். அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அப்பகுதி மக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் குமரன் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப்(35) என்பது தெரிந்தது. இவர் சைதாப்பேட்டை, கேகேநகர், குமரன் நகர் பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். இவரிடமிருந்து 41 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜேக்கப்பை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment