Wednesday,February,08,2012இலங்கை::புலிகளுக்கு பொருட்கள் அனுப்பி வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு புலிகளுக்கு தளவாட பொருட்கள் அனுப்பியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசுவை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீனில் விடுதலையான வன்னியரசு, வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து ஆஜராகாததால் வன்னியரசை கடந்த 4ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், வன்னியரசை ஜாமீனில் விடுவிக்க கோரி சைதாப்பேட்டை பெருநகர 23வது நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அகிலா ஷாலினி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் வன்னியரசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
விசாரணையின்போது காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் வன்னியரசை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment