Saturday, February 11, 2012பெல்ஜியம்::இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு ; கொண்டு செல்லும் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அழைத்துச் சென்ற நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஓராண்டுக்கு மேல் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து பிரான்ஸிற்கு நபர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா, தன்சானியா, துருக்கி மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் ஊடாக இலங்கையர்கள், பிரான்ஸிற்கு கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதுவரையில் மொத்தமாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பில் 23 தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய அதிகாரிகள் இந்த நடவடிக்கைகள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment