Tuesday, February 21, 2012இலங்கை::யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியின் புராதன இடமொன்றில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பொலிஸ் நிலையம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
ஒல்லாந்தரின் கட்டடக் கலைக்கு அமைய இந்தப் பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் தொடர்பான பேராசிரியர் ஜகத் பாலசூரிய குறிப்பிட்டார்.
கோட்டை நுழைவாயிலை மறைக்காது, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கட்டடக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இதனை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment