Saturday, February 11, 2012இலங்கை::இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் சில இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் ஐந்து மீனவர்களும், அவர்கள் பயணித்த படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் வைத்து, இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விமானத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 26 ஆகவும், படகுகளின் எண்ணிக்கை 05 ஆகவும் குறைவடைந்துள்ளது.
No comments:
Post a Comment