Thursday, February 09, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு அவரது பாதுகாப்பு மற்றும் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இன்று பிற்பகல் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடுக்கு எதிராக அந்த நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் தீர்மானமில்லை; புதிய ஜனாதிபதி மக்களுக்கு உறுதி!
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோதிலும் அவரைக் கைது செய்யும் தீர்மானம் இல்லையென அந்நாட்டின் புதிய ஜனாதிபதி மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவரின் ஊடக செயலாளர் மஷூட் இமாட் தெரிவித்துள்ளார்.
மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புத் தொடர்பில் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் பதவி விலகினார்.
இதனையடுத்து உப ஜனாதிபதி கலாநிதி வஹீட் ஹசன் மாலைதீவு ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட்டை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment