Saturday, February 4, 2012

மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவருக்கு சொந்தமான காணியை பிள்ளையானின் சகோதரர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளார்!

Saturday, February 04, 2012
இலங்கை::மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் உள்ள சிங்களவர் ஒருவருக்கு சொந்தமான பல லட்சம் ரூபா பெறுமதியான காணி ஒன்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் சகோதரர் உள்ளிட்ட திட்டமிட்ட குழுவினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவந்தமாக கைப்பற்றியுள்ள இந்த காணியை சுற்றி இந்த குழுவினர் வேலிகளை அமைந்துள்ளனர். இந்த காணி கல்குடா நகரில் மயானம் ஒன்று அருகில் இந்த காணி அமைந்துள்ளது. பிள்ளையானின் சகோதரருடன் குட்டி என்ற நபரும், இந்த காணி கொள்ளையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக காவற்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் காணியை கைவிட்டு, சென்ற சிங்களவர், அந்த காணியை பார்வையிட சென்றிருந்த போது, அது பிறரால் கைப்பற்றப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. காணியை கைப்பற்றியுள்ள நபர்கள் போலி காணி உறுதியையும் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment