Monday, February 06, 2012இலங்கை::நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்:-
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக எட்டப்பட வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
சர்வதேசத்திடம் சென்று முறைப்பாடு சொல்வதனை விடவும், நாட்டின் அதி உயர் நிர்வாக பீடமான நாடாளுமன்றில் கருத்துக்களை முன்வைப்பது முக்கியமானது என ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொள்ளாமை தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிப் பேரவை அமர்வுகள் போர் இடம்பெற்ற காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன, தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது என கட்சி குறிப்பிட்டுள்ளது.
போர் இடம்பெற்ற சூழ்நிலைகள் வேறு தற்போதைய நிலைமைகள் வேறு என்பதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாட்டின் மொத்த சனத்தொகையில் 4 வீதமான மக்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment