Sunday, February 05, 2012இலங்கை::புலிகள் மீள இணைவதனை தடுக்க இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்-ரொஹான் குணரட்ன:-
இந்தியாவுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுப்பதற்கு இந்தியாவுடனான உறவு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசாங்கத்துடனான உறவுகளை முறித்துக் கொள்வது புத்திசாதூரியமான தீர்மானமாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கக் கூடிய ஆற்றல் தமிழக அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமையக் கூடாது எனவும் ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்...
வெளிநாடுகளிலுள்ள புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சி-மைத்திரிபால சிறிசேன!
வெளிநாடுகளிலுள்ள புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொறுப்புள்ள அரசு என்ற வகையில் அதனை இலங்கை மிக நுட்பமான முறையில் தோற்கடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொலன்நறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இலங்கையின் 64வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment