Friday, February 3, 2012

புலிகளுக்கு ஆதரவான சினிமா: ரகசியமாக பார்த்தார் (புலிகளின் உளவுப் பிரிவு) (புலி)வைகோ!

Friday, February 03, 2012
சென்னை::புலிகளுக்கு ஆதரவான சினிமா: ரகசியமாக பார்த்தார் (புலிகளின் உளவுப் பிரிவு) (புலி)வைகோ!

ராஜிவ் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; மீண்டும் புலிகளின் போர் தொடரும் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள, "தேன்கூடு' என்ற திரைப்படத்தை, ம.தி.மு.க., பொதுச் செயலர்(புலிவால்) வைகோ நேற்று சென்னையில் ரகசியமாக பார்த்தார். அப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும், சென்சார் போர்டு அனுமதியும் கிடைக்காது எனவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வாழும் தமிழர்களின், இயல்பான வாழ்க்கையில் காதல் காட்சிகளுடன் படம் ஆரம்பமாகிறது. இலங்கையில் நடந்த போர்க்களக் காட்சிகள், ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம், இலங்கைத் தமிழர்கள் மீது கொத்து கொத்தாக குண்டு வீசிய காட்சி, சிங்கள ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த போர் சம்பவங்கள், பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார். அவர் இறக்கவில்லை. மீண்டும் புலிகளின் போர் தொடரும் என்ற ரீதியில் காட்சிகள் அமைக்கப்பட்டு, "தேன்கூடு' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்,புலிகளின் மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்ட ராஜிவ் மரணத்தை நியாயப்படுத்தியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்த அமைதிப்படை பற்றியும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பிரபாகரன் இறக்கவில்லை; அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் வகையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை, சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று ரகசியமாக பார்த்தார். படத்தில் வரும் உருக்கமான காட்சிகளைக் கண்டு அவர் மனம் வெதும்பினார்; சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதார். முழுக்க, முழுக்க புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த படம், புலிகளின் ஆதரவாளர்களுக்கு புதிய நம்பிக்கையை தரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, சென்சார் போர்டு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ராஜிவ் மரணத்தை நியாயப்படுத்தும் காட்சியும் உருவாக்கப்பட்டதால், இந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு, அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினால், தமிழகத்தில் திரையிடாமல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு திரையிடுவதற்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

- எஸ்.சிந்தாஞானராஜ்.

No comments:

Post a Comment