Tuesday, February 07, 2012சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள்-பெப்சி அமைப்பினருக்கு இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தை அரசு அதிகாரிகள் முன்னிலையில் வரும் 9ம் தேதி நடக்கிறது. தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பள விகிதம் நிர்ணயிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு வாரமாக ஷூட்டிங் நடக்கவில்லை. இந்நிலையில் இரு தரப்பினரிடமும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
பெப்சியினர் தன்னிச்சையாக உயர்த்தி கேட்கும் சம்பளத்தை தர இயலாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும், 3 வருடமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தவில்லை எனவே சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று பெப்சி தரப்பிலும் பேச்சுவார்த்தையின்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை. மீண்டும் வரும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. ‘9ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 10ம் தேதிக்கு பிறகு ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என்று இருதரப்பு சங்க நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment